
கலைஞர் மீது எனக்கு அளவு கடந்த மரியாதை உண்டு. அதற்கு அவரது நகைச்சுவை உணர்வும் ஒரு காரணம். அவரது நகைச்சுவை உணர்வுக்கு இதோ ஒரு எடுத்துக்காட்டு.
மஞ்சள் துண்டு ஏன்?
அறிவுக்கு மதிப்பளித்து அறியாமைக்கு விடை கொடுத்த
அஞ்சுகச் செல்வர் மஞ்சள் கம்பளி அணிவது ஏன்?
மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்; நானும் மறுக்காமல்-
தனி அடையாளம் இருக்கட்டுமே என்று
இனி இதையே அணிவதென முடிவெடுத்தேன்
இந்த மஞ்சள் நிறம் குறித்து புத்தர் கருத்தொன்றும் உண்டு
"தருக்கொழிந்து தன்னை வெல்வான்
தன்னியல்பை ஆள்வான் எவனோ;
ஒளியும் தெளிவும் உண்மையுமானவன்
எவனோ; அவனே மஞ்சளாடை அணியலாம்"
இந்தத் தகுதி முழுவதும் எனக்குண்டென்று
தரித்திடவில்லை மஞ்சள் துண்டு;
இத்தகுதிக்கென்னைத் தயார்படுத்திக் கொள்ளவே
தவம் கிடக்கின்றேன்.
18.11.2003 அன்று எழுதிய கவிதையில் கலைஞர் இப்படிச் சொல்லி இருக்காரு. "6 வருசம் ஆச்சே தலைவர் சொன்ன மாதிரி இந்த தகுதிக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டாரா?"னு கேட்கிறீங்களா?
அவரைவிட நீங்க பயங்கரமா ஜோக் அடிக்கிறீங்களே பாஸு!
கலைஞர் சொன்னதை அடிக்கடி நினைவுக்குக் கொண்டு வந்து உங்களையே படுத்திக்காதீங்க..
ReplyDeleteவடிவேலு( கைப்புள்ள) காமெடி நினைவிருக்கா உங்களுக்கு..
“அது.. போன மாசம்.. இது இந்த மாசம்..”
அவ்வளவுதான் !!
:)
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in